நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பின்னர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இருவர் நேற்று (09) பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1859 ஆக அதிகரித்துள்ளதாக இப்பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றாளர்களாக பதிவான இருவரில் ஒருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் மற்றைய நபர் கடற்படையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 1057 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மேலும் 791 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இதுவரை 866 கடற்படையினர் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் 563 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியோரில் 595 இதுவரை தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version