திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று (10.06.2020) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
அட்டன் பகுதியை சேர்ந்த 28 வயதான மனோகரன் கணேஷ் என்பவரே மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு அட்டன் நோக்கி பயணிக்கையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து குறித்த இளைஞர் வீசப்பட்ட நிலையில் தலைக்கவசமும் கழன்று விழுந்துள்ளது. அதன்போது குறித்த இளைஞனின் தலைப்பகுதி அருகிலுள்ள கல்லொன்றில் மோதியுள்ளது.
படுகாயமடைந்த இளைஞனை கொட்டகலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார் என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.