யாழ்ப்பாணம், குசமன்துறை கடற்கரையில், நேற்று(12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 104 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடல் மார்க்கமாக போதைப்பொருட்களை இலங்கைக்குள் எடுத்துவருவதை தடுப்பதற்காக இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று(12) வடக்கு கட்டளைப் பிரிவின் கடற்படையினர் சிலர் யாழ், குசமன்துறை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, படகொன்றில் வந்த இருவர் சாக்கு பையொன்றை கரைக்கு எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

பின்னர் குறித்த சாக்கு பையை சோதனையிட்டபோது, 25 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 57 கிலோவுக்கு அதிக நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்பின்னர் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளையடுத்து தப்பிச் சென்ற படகுடன் அதிலிருந்த சந்தேகபர்கள் இருவர் யாழ். மாதகல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, கடலில் கைவிடப்பட்டிருந்த 13 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 46 கிலோவுக்கு அதிக நிறைவுடைய கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, மொத்தமாக 104 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவரும் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version