சவூதி அரேபியாவில் இயங்கிய இரு விபசார விடுதிகளை அந்நாட்டு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது 7 ஆண்களும் 8 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என சவூதி அரேபிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் றியாத்துக்கு தெற்கே உள்ள அல் மனாக் பகுதியில், பங்களாதேஷ் பிரஜைகளான ஆண்கள் இருவரால் இந்த விபசார விடுதிகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாக றியாத் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வீட்டுப் பணிப்பெண்களை கவர்ந்திழுத்து, விபசாரத்தில் ஈடுபடுத்தினர் என றியாத் பொலிஸ் பேச்சாளர் கேணல் ஷாகர் அல் துவைஜ்ரி தெரிவித்துள்ளார்.

 

மேற்படி பங்களாதேஷ் நபர்கள், வீட்டுப் பணிப்பெண்களை அவர்களின் அனுசரணையாளர்களிடமிருந்து தப்பியோடி வர உதவிசெய்து, அவர்களை  விபசாரத்தில் ஈடுபடுத்தினர் என அவர் தெரிவித்தார்.

மேற்படி விபசார விடுதி முற்றுகைகளில் பங்களாதேஷை சேர்ந்த 7 ஆண்களையும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த 8 பெண்களும் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என கேணல் அல் திவைஜ்ரி மேலும் தெரிவித்துள்ளார். &

Share.
Leave A Reply

Exit mobile version