சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பவர் ஸ்டைலிஷ் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அல்லு அர்ஜுன்.

இந்த லாக்டவுனில் அவர் பல வீடியோக்களையும், போட்டோக்களையும் ரசிகர்களுக்காக பகிர்ந்தார்.

சமீபத்தில் தன் மகள் அர்ஹாவுடன் விளையாட்டாகப் பேசி கொஞ்சிய ஒரு வீடியோவை பகிர்ந்தார்.

அதில் தன் செல்ல மகளிடம், நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேலியாக கேட்க, அதற்கு 3 வயதான அவள் முடியாது என்று அழகாக மறுக்கிறார்.

மறுபடியும் அல்லு அர்ஜுன் அவளிடம் இதே கேள்வியைக் கேட்க முடியாது என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அப்பாவிடமிருந்து தப்பிக்க ரூமுக்குள் ஓடிப் போகிறாள்.

இந்த அழகான வீடியோ வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுன் இதற்கு கேப்ஷனாக ‘Attempt number #374 அப்பாவின் முயற்சிகள்’ என்று தலைப்பிட்டுள்ளார்.

அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டியை 2011-ஆம் ஆண்டு கரம் பிடித்தார். இவர்களுக்கு அல்லு அயன் என்ற மகனும், அல்லு அர்ஹா என்ற மகளும் உள்ளனர்.

சினேகாவை ஒரு திருமணத்தில் சந்தித்த அர்ஜுன் கண்டதும் காதல் வயப்பட்டார். இரு குடும்பத்தாரின் சம்மதத்தின் பேரில் இந்த ஜோடிக்கு திருமணம் முடிந்தது.

அல்லு அர்ஜுன் அடுத்து புஷ்பா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்காக தாடி மீசையுடன் வித்யாசமான கெட்டப்பில் தோன்றவிருக்கிறார் இந்த ஸ்டைலிஷ் ஸ்டார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தானா ஆகியோர் நடிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version