சாவகச்சேரி பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட  தகராறு காரணமாக  கத்திக் குத்துக்கு  இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டுத்  திட்டம் பகுதியை சேர்ந்த 12 வயதான    சிறுமியே படுகாயமடைந்துள்ளார். 

குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று  (15) ஞாயிற்றுக்கிழமை  வைபவம்  நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவினர்களுக்கு இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டு  மோதலாகமாறியுள்ளது.

இதன்போதே  ஒருவர், பிறிதொருவரைக் கத்தியால் குத்த முயற்சிக்கையில்  அங்கிருந்த சிறுமியின் கழுத்தில்  கத்தி குத்தியுள்ளது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version