தனது குழந்தையை தன்னிடமிருந்து பிரிக்க வேண்டாம் என 14 வயதான சிறுமியொருவர் கம்பஹா மேலதிக நீதிவான் ஆர்.எஸ்.எம் மகேந்திரராஜாவிடம் இன்று (18) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது தாயின் துணைவரினால் துஷ்பிரயோகத்திற்குள்ளான 14 வயது சிறுமியொருவர் குழந்தை பிரசவித்திருந்தார். குறைந்த வயது மற்றும் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய காரணத்தினடிப்படையில் குழந்தையை காப்பகத்திற்கு அனுப்ப முயன்றபோது, சிறுமி அதை அனுமதிக்கவில்லை.

குழந்தை பிரசவித்த 12ஆம் நாளான இன்று, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்தது.

இதன்போது, குழந்தையை தன்னிடமிருந்து பிரிக்க வேண்டாமென சிறுமி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, இருவரையும் தங்க வைக்க பொருத்தமான இடத்தை கண்டறியும் வரை, கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன், 14 வயது சிறுமி மற்றும் அவரது 12 நாள் சிசுவை தங்க வைக்க பொருத்தமான இடத்தை கண்டறிந்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிட்டதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி வரை வழக்ககை ஒத்திவைத்தார்.

14 வயது சிறுமி குழந்தையை பிரசவித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version