பிரான்சில் காவல்துறையினர் அத்துமீறியதும் இனத்துவேசமுடையதுமான சோதனைகளை நடாத்தவதாக மனித உரிமைகள் அவதானிப்பு மையமான Human Rights Watch குற்றம் சாட்டி உள்ளது.
கறுப்பின, மற்றும் அரபு இன இளைஞர்கள், பல சமயங்களில் சிறுவர்களின் மீதும் காவல்துறையினர் contrôles “au faciès” எனப்படும் சுவருடன் சாத்தி வைத்து, முழுமையான சோதனைகள் நடாத்தப்படுவதாகவும், மனிதஉரிமைகள் அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், 10 வயதுச் சிறுவர்கள் முதல், பதின்மவயதினர், இளைஞர்கள் என, முக்கியமாகச் சிறுபான்மையினரை இலக்கு வைத்து, அவர்களின் கௌரவத்திற்குப் பெரும் இழுக்காக, பொதுமக்கள் முன்னிலையில், கடுமையான முழு உடற்சோதனைகளை (palpation corporelle) காவல்துறையினர் நடாத்துகின்றனர்.
பிரான்சின் பல மாவட்டங்களில் இப்படியான மோசமான சோதனைகளுக்கு உட்பட்டவர்களிடம், ஒரு வருட காலமாகப் பெறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், இந்த அறிக்கையையும் குற்றச்சாட்டினையும் Human Rights Watch தொடுத்துள்ளது