வரலாற்றுப் பெருமைமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவில் உற்சவத்தின் போது படையினர் காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை குறித்து பிதமர் மகிந்த ராஜபக்ஷ உடனடிக்கவனத்தைச் செலுத்தியிருக்கின்றார்.
வடபிராந்தியப் பிரதிப் பொலிஸ் மா அதிபரை இன்று காலை தொடர்புகொண்ட பிரதமர், இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துமாறும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, நயினாதீவுப் பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பந்தப்பட்ட படையினரை அழைத்து இன்று காலை விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.