வவுனியா பெரியகட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அண்மையில் புகையிரதத்திற்கு முன்பாக பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்திற்கு முன் பெரியட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உள்ள புகையிரத வீதியில் இன்று  (22.06.2020) திங்கட்கிழமை அதிகாலை புகையிரதத்திற்கு முன் பாய்ந்து மன்னாரை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை தனது காரை புகையிரத பாதையின் அருகில் நிறுத்திவிட்டு மன்னார் சென்ற புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தற்கொலை செய்தவர் மன்னார் எழுத்தூரில் வசிக்கும் சமூக சேவையாளரும், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளராக கடமையாற்றிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆ.ரகு சங்கர் (வயது-43) என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சடலம் மடு புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version