சிக்கிமின் மலைச்சிகரத்தில் சீனா- இந்திய வீரர்களிடையே மோதல் ஏற்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 ம் தேதி இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். ஏராளமானோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ராணுவ கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

கிழக்கு லடாக்கில் சுஷூலின் சீனப் பக்கத்தில் உள்ள மோல்டோவில் லெப்டினன்ட் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த நிலையில் சிக்கிமின்  உயரமான மலைபக்குதியில்  இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வீடியோவில் இந்திய மற்றும் சீன அதிகாரிகள் மோதிக் கொள்வதைக் காணலாம்.

இந்திய மற்றும் சீன வீரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். “திரும்பிச் செல்” மற்றும் “சண்டையிட வேண்டாம்” என்று இரு தரப்பிலிருந்தும் சத்தம் போடுகிறார்கள்.

பனி மூடிய இடத்தில் இந்த சண்டை நடைபெறுகிறது. வீடியோ எப்போது படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை,

Share.
Leave A Reply

Exit mobile version