நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு பிரபல நடிகை வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றன.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்காக ஒரு ஸ்பெஷல் டான்ஸ் வீடியோவை பதிவிட்டிருந்தார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

Hooping என சொல்லப்படும், வலையத்தை வைத்து ஜிம்னாஸ்டிக்குடன் இவர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி, நடிகர் விஜய்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வீடியோ லைக்ஸை குவித்து வருவதோடு, இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

சம்யுக்தா ஹெக்டே ஜெயம் ரவியின் கோமாளி, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version