புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றினர்.

பின்னர்,  தாராபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள்.

அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றைத் தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version