யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இன்று அதிகாலை வீடொன்று உடைக்கப்பட்டு, 14 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,வீட்டிலுள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மர்மமான முறையில் வீட்டிற்குள், நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

 

வீட்டிலுள்ளவர்கள் உறக்கத்தில் இருந்து விழித்துப் பார்த்தபோது, வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version