நடிகை வனிதா விஜயகுமார் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்கு வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.
மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளாவார் வனிதா விஜயகுமார். இவர் நடிகர் விஜய் ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்தவர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு ரீ என்ட்ரி கொடுத்தார்.
மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார்.
இந்நிலையில் வனிதா – பீட்டர் பால் திருமணத்தின் போது, இருவரும் முத்தம் கொடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில்,வைரலானது.
இதையடுத்து பலர் இந்த முத்த போட்டோவை விமர்சித்தனர். குறிப்பாக, ‘மகள் இருக்கும் பொழுது, இப்படி முத்தம் கொடுத்து, அந்த போட்டோவை வெளியிடுவது சரியா.?’ என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பினர்.
இதை தொடர்ந்து, நடிகை வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கார்ட்டூன் படங்களிலும், ஃபேரி டேல் புத்தகங்களிலும் இருக்கும் முத்தக்காட்சி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.
மேலும், ”பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை டிஸ்னி கார்ட்டூன், ஃபேரி டேல்ஸ் உள்ளிட்டவற்றை பார்க்க விடாதீர்கள்.
அதில் இந்த முத்தக்காட்சிகள் இருக்கின்றன. ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கும் பொழுதோ, இல்லை திருமணம் செய்யும் பொழுதோ, அவர்கள் முத்தம் கொடுத்து கொள்வார்கள் என்பதை குழந்தைகள் அறியவே கூடாது” என தனது முத்தம் பற்றி விமர்சித்தவர்களுக்கு, நக்கலான பதிலை கொடுத்துள்ளார் வனிதா.