ஜேர்மனி கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னும் Gütersloh நகரிலுள்ள இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுவோருக்கு கொரோனா பரவியது.

அதனையடுத்து, அங்கு ஜூன் மாதம் 23ஆம் திகதி மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதுதான் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டபின் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நிகழ்வாகும்.

Gütersloh நகரிலுள்ள Tönnies இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை என்னும் தொழிற்சாலையில் பணிபுரியும் 2,000 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.

ஆகவே, மேலும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அங்கு ஜூன் மாதம் 23ஆம் திகதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

ஊரடங்கு ஜூன் 30ஆம் திகதி காலாவதியாகும் நிலையில், தற்போது அது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் ஜூலை 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Gütersloh நகரில், கடந்த ஏழு நாட்களில் 100,000 பேருக்கு 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version