சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.

அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version