அனலைதீவு 4ம் வட்டாரப்பகுதியில் மின்சாரம் தாக்கி 11 மாத பெண்குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் சோதகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தயாளன் விதுசா என்ற 11 மாத குழந்தையே உயிரிழந்துள்ளார்.

வீட்டினுள் இருந்து நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு மின்சார வயர் வீட்டினுள் இருந்து இணைக்கப்பட்டிருந்தது. தவழ்ந்து சென்ற குழந்தை வயரினை இழுத்துள்ளது. இதன் போது வயர் ஊடாக பாய்ந்த மின்சாரம் குழந்தையினை தாக்கியுள்ளது.

அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று காட்டிய போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறினர். மேலதிக விசாரணையினை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version