இஸ்லாமாபாத்தில் தன் மகனுக்கு பெண் கொடுக்காத ஆத்திரத்தில் 14 வயது சிறுமியை எரித்து கொலை செய்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது.

பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை தன் மகனுக்கு ஒருவர் பெண் கேட்க, பெண்ணின் தந்தை மறுத்ததால், அந்த பெண்ணை உயிருடன் கொளுத்தப்பட்டார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் முகமது யூசுப் என்பவரது மகள் சாதியா (14). அவரை தனது மகனுக்கு பெண் கேட்டுள்ளார் யூசுபின்= சகோதரரான முகமது யாகூப். ஆனால், சாதியாவை ஏற்கனவே வேறொரு உறவினருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக தான் வாக்குக்கொடுத்துவிட்டதாக யூசுப் கூறியுள்ளார்.

தன் மகனுக்கு பெண் கொடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த யாகூப் வீட்டுக்குள் புகுந்து சாதியா மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் தீவைத்து கொளுத்தி உள்ளார்.

வீட்டில் யாருமில்லாத நிலையில், எப்படியோ வீட்டிலிருந்து தப்பிய சாதியா மருத்துவமனையில் அனுமதிக்க
ப்பட்டார். ஆனால், அதிகபட்ச காயங்கள் காரணமாக சிறிது நேரத்தில் சாதியா உயிரிழந்தார்.

ஆனால், குடும்பத்தினர் இந்த விஷயத்தை போலீசாரிடமிருந்து மறைக்க முயற்சி செய்துள்ளனர். விசாரனையில் ஒவ்வொருவர் ஒவ்வொரு முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், முறைப்படி விசாரித்தபோது யாகூப் சிக்கிக்கொண்டார். தொடர் விசாரணையில் யாகூப் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்

Share.
Leave A Reply

Exit mobile version