இந்தியாவில் நேற்றைய தினம் மாத்திரம் 49,311 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்ததிலிருந்து இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிகபடியான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவென அந் நாட்டு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நேற்றைய தினம் இந்தியாவில் மொத்தமாக 740 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளதுடன், முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேஸிலும் உள்ளது.

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் படி இந்தியாவில் தற்போது மொத்தமாக 1,288,108 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம் உயிரிழப்பு எண்ணிக்களின் தொகையானது 30,601 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 817,209 ஆகவும் பதிவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் இதுவரை 15,511,157 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 633,396 ஆக பதிவாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version