இலங்கையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜுலை மாத நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் 5,242 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 1,642 பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2020 ஜனவரி 15 ஆம் திகதி வரையான 2 வார காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளின் எண்ணிக்கை 54 ஆக காணப்பட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஏறக்குறைய மூன்று மாத காலத்திற்கு நீடித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக சிறுவர்கள் மீதான கொடுமை மற்றும் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version