2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நவ்பர் மௌலவி என்ற நபரே என தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு தலைமை தாங்கிய சஹரான் ஹாசிம் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியில்லை என்றும் நிலாந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கட்டாரில் 19 வருடங்களாக வசித்து சர்வதேச தொடர்புகளை பேணிவந்த நவ்பர் மௌலவி என்பவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலொன்று இடம்பெறலாம் என்பது குறித்து பத்து மாதங்களுக்கு முன்னரே புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிசிடம் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version