மட்டக்களப்பு வாகரையைச் சேர்ந்த குடும்பப் பெண்ணை பலாத்காரத்திற்கு உட்படுத்தி, கொலை செய்ய முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பொதுமக்கள் பிடித்து நையப் புடைத்து வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இன்று நண்பகல் வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள பெண்கள் மலசல கூடத்தினுள் சென்ற பெண்ணை அவதானித்த நபர், அவரை பின் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.