யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19 ஆம் திகதி காட்டு யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சைபலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கற்பிக்கும் விரிவுரையாளரான கொழும்பு, களனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி தில்ருக்ஷி (Gayathri Dilrukshi) 32 வயதுடைய பெண் விரிவுரையாளர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version