லங்கை பாராளுமன்ற தேர்தலில் கடந்த 2015தேர்தலோடு ஒப்பிடுகையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இம்முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது.

வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டம் அதிகூடிய 76வீதம் வாக்களிப்பைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது.

வடக்குக்கிழக்கில் 16 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக அந்தந்த மாவட்டங்களில் வாக்கெண்ணும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

வடக்கில் கடந்த தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 61.56வீதமாகவிருந்த வாக்களிப்புவீதம் இம்முறை 67வீதமாக அதிகரித்துள்ளது.

அதேபோன்று வன்னி மாவட்டத்தில் 71.89வீதமாகவிருந்த வாக்களிப்புவீதம் இம்முறை 74வீதமாக அதிகரித்துள்ளது.

கிழக்கில் கடந்ததேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 69.12வீதமாகவிருந்த வாக்களிப்புவீதம் இம்முறை 76வீதமாக அதிகரித்துள்ளது.

ஆனால் திகாமடுல்ல மாவட்டத்தில் 73.99வீதமாகவிருந்த வாக்களிப்புவீதம் இம்முறை 73வீதமாக குறைந்துள்ளது.

அதேபோன்றுதிருகோணமலை மாவட்டத்தில் 74.34வீதமாகவிருந்த வாக்களிப்புவீதம் இம்முறை 74வீதமாக குறைந்துள்ளது. சிறிதளவு குறைவான் வாக்களிப்பு இவ்விரு மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

இம்முறை நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் 16 பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 49 அரசியல்கட்சிகள் 70 சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 1033 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

அத்துடன் கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் 12 இலட்சத்து 12 ஆயிரத்து 655 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்..

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் என்றுமில்லாதவகையில் அதிகவேட்பாளர்கள் பொதுத்தேர்தலில் போட்டியிட்டனர்.

இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் 4 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக 13 அரசியல் கட்சிகள்இ 14 சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 189 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இம் மாவட்டத்தில் 2 இலட்சத்து 88 ஆயிரத்து 868 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளார்கள். திருகோணமலை தேர்தல் தொகுதியில் 97065 பேரும்இ மூதூர் தேர்தல் தொகுதியில் 110891 பேரும்இ சேருவில தேர்தல் தொகதியில் 80912 பேரும் வாக்களிக்கதகுதி பெற்றுள்ளனர்.

இங்கு 307 வாக்களிப்பு நிலையங்களும் 44 வாக்கெண்னும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 16 அரசியல் கட்சிகள்இ 22 சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம் மாவட்டத்தில் 409808 பேர் வாக்களிக்கத்தகதி பெற்றுள்ளனர். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 192808 பேரும், கல்குடா தேர்தல் தொகுதியில் 119928 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 97073 பேரும் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

இங்கு 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் 6127 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களை தெரிவு செய்ய 20 அரசியல் கட்சிகள் 34 சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 540 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இம் மாவட்டத்தில் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 979 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளார்கள். அதற்கமைய அம்பாறை தேர்தல் தொகுதியில் 177144 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 168793 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 90405 பேரும் கல்முனை தேரத்ல தொகுதியில் 77637 வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

இங்கு 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 6ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version