தமிழில் மக்களிடையே அதிக ஆதரவைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது சர்ச்சையை கிளப்பி மக்களைப் பேச வைத்து விடுகிறார்கள். கடந்த மூன்று சீசன்களும் ஜூன் மாதத்தில் தான் ஒளிபரப்பைத் தொடங்கின. ஆனால் இந்தாண்டு கொரோனா பிரச்சினையால் நிகழ்ச்சி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், தமிழிலும் வரும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பமாகும் எனக் தகவல் வெளியாகி உள்ளது. போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் வேலைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

இந்த முறை சர்ச்சை நாயகிகளாக டிக்டாக் புகழ் இலக்கியா மற்றும் ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் இருப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version