மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த   மரணம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவு பெண்  மற்றும் மேலும் ஒருவர் மன்னார் பொலிஸரின் உதவியுடன் கைது செய்யபட்டுள்ளனர்.

உயிரிழந்த யுவதி யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த 21 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்டவர்கள்களில் உயிரிழந்த யுவதியின் இரத்த உறவினர் ஒருவர் உள்ளடங்குவதாகவும் தெரிய வருகின்றது.

சம்பவம்  குறித்து மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்டதோடு,  மீட்கப்பட்ட சடலம் பெண் என அடையாளம் காணப்பட்டது. குறித்த சடலம் தொடர்பில் மன்னார் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.

அன்றைய தினம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மன்னார் பொலிசார், சடலத்தை மீட்டு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார். இதனையடுத்து சடலம் அடையாளம் காண்பதற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டது.

குறித்த யுவதி பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் மன்னார் பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இரண்டு யுவதிகள் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து மன்னார் பொலிஸாரும்,  விசேட புலனாய்வு பிரிவினரும்  இணைந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த சுமார் 21 வயதுடையவர் என தெரிய வருகிறது.

சம்பவ தினத்தில் நெடுந்தீவை சேர்ந்த குறித்த யுவதியை, கைதான இரண்டு பெண்களும்  மன்னாரிற்கு அழைத்து வந்தமை விசாரணை மூலம் வெளியாகி உள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட யுவதியின் உறவு முறையான பெண்ணும், இன்னொரு பெண்ணும் கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்   நெடுந்தீவை சேர்ந்த குறித்த யுவதியின் மரணத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் மன்னாரை சேர்ந்த சிலரையும் மன்னார் பொலிஸார் தோடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version