இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி இன்று (23) அதிகாலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,947ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 138 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு கொரோனா தொற்றிலிருந்து 2,798 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.