வாள்வெட்டு குழுக்களை இல்லாமல் செய்து பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று செங்கலடி பிரதேசத்தில் 15 வயது மாணவன் ஒருவன் வாள் வெட்டிற்கு இலக்காகி மரணமடைந்துள்ளான்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை , கொலையில் முடிந்திருக்கிறது. செங்கலடி  பாடசாலையொன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும், செங்கலடியை சேர்ந்த மாணவனுக்கு, அதே பாடசாலையில்  கற்கும்  கொம்மாதுறையை சேர்ந்த மாணவன் தாக்கியதால் காயமடைந்த நிலையில் செங்கலடியை சேர்ந்த மாணவன்,  வீடு சென்று நடந்த விடயத்தை கூறியதும்,

காயமடைந்த மாணவனின் உறவினர்கள் இருவர் இம்மாணவனை அழைத்துக் கொண்டு இரவு (22/08) 08.30 மணியளவில்  கொம்மாதுறைக்கு சென்று, ஏன் ? இவனை தாக்கினீர்கள் என விடயத்தை கேட்டுக்கொண்டிருந்த போது ஏற்ட்ட கருத்துமுறன்பாட்டினால் கொம்மாதுறையை சேர்ந்த சம்பந்தப்பட்டவர்களால்,  இவர்கள் தாக்கப்பட்டு,  வாள் வெட்டுக்கும் உள்ளாகியுள்ளனர்.

பாரிய வாள் வெட்டுக்குள்ளான செங்கலடியை சேர்ந்த மாணவன் ரமணன் திவ்வியநாதன் (14) சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இம் மாணவனின் உறவினர்களான சசிகுமார் மற்றும் பிரேமநாதன் ஆகிய இருவரும் பாரிய வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று விசாரனைகளை மேற்கொண்டு, மாணவனின் சடலத்தை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும், காயங்களுக்குள்ளானவர்களை  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.

கொலைக்கு காரணமானவர்கள் தப்பிச்சென்றுள்ள போதும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக வாள், ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

மேலதிக விசாரனைகளை ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி ஐயன்கேணி கொம்மாதுரை பகுதிகளில் வாள் வெட்டு கலாசாரம் மிக மோசமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

இளைஞர்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சில தமிழ் ரவுடிகளினால் மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்படும் இந்த வாள் வெட்டு குழுக்களுக்கு பொலீசார் மறைமுக ஆதரவை வழங்கி வருகின்றனர்.

கடந்த காலங்களில் வாள் வெட்டு குழுக்களால் பல கடத்தல் கொள்ளை கொலை சமூக சீரழிவுகள் பல நடைபெற்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாது பொலீசார் அவர்களுடன் மறைமுக ஆதரவை வைத்து வாள் வெட்டு குழுக்களை ஊக்குவித்தே வந்தனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் செங்கலடி கணபதிப்பிள்ளை கிராமம் ஐயன்கேணி கொம்மாதுரை போன்ற பகுதிகளில் குறித்த வாள் வெட்டு குழுக்களின் தலைவர்கள் மறைமுகமாக இருந்து இளைஞர்களை ஒருங்கிணைத்து கடத்தல் கொள்ளை கொலை கப்பம் பேறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த குழுக்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் கை எரி குண்டுகள் வாள்கள் என்பன உண்டு.

ஆனால் இவர்களை கைது செய்ய பொலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தற்போது இந்த வாள் வெட்டு கலாசாரம் பாடசாலை மாணவர்கள் வரை சென்றுவிட்டது.

பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் நடக்கும் மிக சாதாரண வாய் தர்க்கம் இந்த வாள் வெட்டு கலாச்சாரத்தால் ஒரு மாணவணை கொலை செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version