தனது கணவர் தன்னிடம் மிகவும் அன்பு செலுத்துவதையும், தன்னுடன் சண்டை பிடிப்பதே இல்லை என்பதையும் காரணங்களாகக் கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள சாம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இந்த விசித்திர காரணத்துடன் ஷரீஆ நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார் என ‘தைனிக் ஜாகரான்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

தனது கணவரின் அதீத அன்பை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என அப்பெண் கூறியுள்ளார்.

இத்தம்பதியினர் 18 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அவர் என்னை திட்டியதில்லை.  எந்த விடயத்திலும் என் மீது அதிருப்தி கொண்டதில்லை. இந்த சூழ்நிலை என்னை மூச்சுத் திணறச் செய்கிறது’ என அப்பெண் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமல்ல, ‘சிலவேளைகளில் அவர் எனக்க்காக சமையலும் செய்கிறார்.

ஏனைய வீட்டு வேலைகளிலும் உதவுகிறார். நான் தவறு செய்யும் போதெல்லாம் அவர் என்னை மன்னித்து  விடுகிறார்.

அவருடன் சண்டையிட வேண்டுமென விரும்பினேன். எல்லாவற்றிலும் இணங்கிப் போகும் கணவருடனான வாழ்க்கை எனக்குத் தேவையில்லை’ எனவும் அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணின் விவகாரத்துக் கோரிக்கைக்கான காரணங்களை அவதானித்த நீதிமன்றம் பெரும் வியப்படைந்தது. இப்பெண்ணின் விவகாரத்த கோரிககை நிராகரிக்கப்பட்டது.

ஆனால், குறித்த பெண் அத்துடன் நின்றுவிடவில்லை. அவர் உள்ளூர் பஞ்சாயத்திடம் இப்பெண் நாடினார். எனினும், பஞ்சாயத்தினாலும் இவ்வியடத்தில் தீர்மானத்துக்கு வர முடியவில்லை.

விவாகரத்து கோருவதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என அப்பெண்ணிடம் கேட்டபோது, அவர் இல்லை என பதிலளித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி பெண்ணின் கணவர் இது தொடர்பாக கூறுகையில், தான் எப்போதும் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தை சுமுகமாக தீர்த்துக்கொள்ளுமாறு மேற்படி தம்பதியை நீதிமன்றம் கோரியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version