எதிர்வரும் மாதத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் முழுமையாக திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. அயல் நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிர வேகமாக பரவி வருகின்றது.

இதுவே விமான நிலையத்தை திறக்காமல் இருப்பதற்கான பிரதான காரணம் என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரயாச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய விமான நிலையம் கால வரையின்றி தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்காக திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version