நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) இதுவரையான காலப்பகுதியில் மேலும் 06 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் நான்கு பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும் ஒருவர் லெபனானில் இருந்தும் மற்றுமொருவர் பிரித்தானியாவில் இருந்தும்நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றில் இருந்தும் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 134 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை 71 பேர் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version