அநுராதபுரத்தில் யாசகம் பெரும் இரு பெண்களுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 61 வயதுடைய பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரியாலயமொன்றுக்கருகில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் யாசகம் பெறும் 20 வயதுடைய யுவதிக்கும் உயிரிழந்த பெண்னுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன் போது யுவதியால் கடுமையாக தாக்குதலுக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தகவல் கிடைக்கப் பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளை முன்னெடுத்தன் பின்னர் , பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அநுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
கொலை தொடர்பில் 20 வயது யுவதியை கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அநுராதபுரம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.