டெல்லியை சேர்ந்த 43 வயது பெண் ஒருவர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலக மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவர்களிடம் இருந்து டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி போலீசார் அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அந்த பெண், அழைப்பை ஏற்க மறுத்துள்ளார். தொடர்ந்து, அவரின் தொலைபேசி எண்ணைக் கொண்டு அந்த பெண்ணின் முகவரியை போலீசார் தேடியுள்ளனர்.

2 மணி நேரத்தில் அந்த பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் டெல்லி போலீசார் தங்கள் முன்னிருந்த சவாலை திறம்பட எதிர்கொண்டனர்.

டெல்லி, ரோகினி பகுதியில் செக்டர் 21 என்பதை மட்டுமே போலீசார் கண்டுபிடித்த நிலையில், அப்பகுதியிலுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவுகளை தட்டி சோதனை செய்தனர்.

இறுதியில், ஒரு வீட்டின் கதவை தட்டிய போது, கதவை திறக்க மறுத்த பெண் ஒருவர், தயவு செய்து சென்று விடுங்கள் எனக்கூறி கூச்சலிட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக தீயணைப்பு படையினரை அங்கு வரச்செய்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது அந்த பெண், சுமார் 15 பூனைகளுடன் தனியாக இருந்துள்ளார். பெண் போலீசார் உதவியுடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அவருக்கு விவாகரத்து ஆனதாகவும், அதிலிருந்தே அவர் தனியாக வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டெல்லியின் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

அதன் பின்னர், பூனை தான் உலகம் என வாழ்ந்து வந்துள்ளார். அத்துடன் அவருக்கு சிறிய அளவில் மனநலம் பாதிப்புள்ளதும் தெரிய வந்துள்ளது.

 

தனக்கு பல கடன்கள் உள்ளது என்றும், அதற்காக தான் உதவி கேட்டு இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லி போலீசார் மனநல மருத்துவரை அழைத்து வந்து அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். அதன் பின்னர், அந்த பெண் இயல்பு நிலைக்கு திரும்பியதும் இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பிய தகவலை போலீசார் சேகரித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version