நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கி இருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளனர்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

நயன்தாரா, விக்னேஷ் சிவன்

கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடி விட்டு இருவரும் அடுத்த வாரம் சென்னை திரும்புவார்கள் என்றும், அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version