2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுள் தேடல் பொறியில்; செக்ஸ் எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் எத்தியோப்பியா  முதலாம் இடத்திலும், இலங்கை இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இவ்வரிசையில் எத்தியோப்பியாவை தொடர்ந்து இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன.

இதற்கு முன்னர் கூகுளினால் வெளியிடப்பட்ட வருடாந்த பட்டியலில் இலங்கை முதலாம் இடத்தையும் கடந்தாண்டு (2019) ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

அத்தோடு, 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகுளில் ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தை வகித்து வந்தது.

கூகுளின் கடந்த 2012ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம்,  ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய இடங்களில் மேல் மாகாணத்தின் கொழும்பு, நுகேகொடை, ஹோமாகம ஆகிய நகரங்கள் முன்னிலை வகிப்பதோடு, 2020ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணம் முதலிடத்திலுள்ளது.

குறிப்பாக வடமத்திய மாகாணத்தில் கட்டுவன்வில, கல்கடவெல, இராஜாங்கனை, புல்மோட்டை, பூனாவை ஆகிய நகரங்கள் முன்னிலையிலுள்ளன.

கூகுளில் ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை அதிகளவில் தேடிய மாகாணங்களின் வரிசையில் முறையே ஊவா, வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், மத்திய மாகாணங்களும் நகரங்களில் முறையே சியம்பலாண்டுவ, தேராவில், மஹாஓயா, பொரலுவகே அய்னா, ஹோமாகம, புளியங்குளம், வருகந்தெனிய, ஹரஸ்பெத்த ஆகியனவும்  அடங்குகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version