இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியும் என 20வது திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் சீனர்கள் இலங்கை குடியுரிமை பெற்று பாராளுமன்றத்திற்குச் செல்வர் எனவும் இலங்கை தற்போது சீன கொலனியாக மாறி வருவதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

“எமக்கு உள்ள பிரச்சினை, 17ற்கு கை உயர்த்தினர், 18ற்கும் கை உயர்த்தினர், 19ற்கும் கை உயர்த்தினர்.

தற்போது அவர்களே 20ற்கும் கை உயர்த்த தயாராகி உள்ளனர். முன்னர் போலவே இந்த மக்கள் அங்கீகாரத்தை கொண்டு யாரேனும் பயனிக்க நினைத்தால் அது வரலாற்று பிழையாகும்.

விசேடமாக இரட்டை குடியுரிமை பெற்று சீன பிரஜை ஒருவருக்கு 25 லட்சம் வைத்துக் கொண்டு இலங்கை பாராளுமன்றம் செல்ல முடியும். அது எப்படியும் நடக்கும். காரணம் இது அதிகம் சீன கொலனியாக மாறியுள்ளது.

நாட்டில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கு ஏன் இரட்டை குடியுரிமையை நீக்கிக் கொள்ள முடியாது? தமிழ் டயஸ்போராக்கல் பலர் இரட்டை குடியுரிமை கோரியுள்ளனர்.

அவர்களும் இலங்கை பாராளுமன்றில் வந்து பிரபாகரனால் சாதிக்க முடியாததை சாதித்துக் காட்ட முயற்சிக்கின்றனர். அதற்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version