தமிழ் மக்கள் விடுடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனத்தை இன்று பாராளுமன்ற வளாகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அவர் பெற்று கொண்டார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் இணை தலைவர்கள் நியமிப்பின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவராக நியமிக்கப்பட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version