தமிழில் தேரோடும் வீதியிலே படத்திலும் தெலுங்கு இந்தி படங்களிலும் நடித்துள்ள பாயல் கோஷ் தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
தற்போது மீண்டும் பாயல் கோஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“அனுராக் காஷ்யப் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் 2014-ல் பாம்பே வெல்வெட் படத்தை அவர் இயக்கியபோது நடந்தது.
அவரது அலுவலகத்துக்கு பட வாய்ப்பு கேட்டு சென்றபோது என்னையே உற்றுபார்த்தார். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிகை என்ற அடையாளம் இல்லாமல் வரும்படி அழைத்தார்.
நான் சல்வார் கமீஸ் அணிந்து சாதாரண பெண்ணாக சென்றேன். அவர் எனக்கு உணவு பரிமாறி சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறிய கதைகளை சொன்னார். அவர் மீது பற்று உருவானது.
பிறகு இன்னொரு நாளில் மீண்டும் அவரது இடத்துக்கு அழைத்தார். அப்போது குடித்து இருந்தார். சிகரெட் இல்லாத எதையோ புகைத்தார்.
அதில் வேறுமாதிரி வாசனை வந்தது. என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று சோபாவில் உட்கார வைத்து என்மீது படுக்க முயன்றார்.
நான் விட்டு விடும்படி கெஞ்சினேன். அப்போது நடிகைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என்று பெருமையாக கூறினார்.
நான் உடன்படவில்லை என்பதை தெரிந்து மனதை மாற்ற முயன்றார். ஒருவழியாக அவரது வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். மீண்டும் பலமுறை என்னை அழைத்தார். நான் போகவில்லை.”
இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.
Share.
Leave A Reply

Exit mobile version