நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் இவ்வாண்டு இறுதிக்குள் திருமண அறிவிப்பு வெளிவரும் என்றும் செய்திகள் வெளியான வண்ணமுள்ளன.

அந்தவகையில் சிம்பு திருமணம் செய்யவுள்ள மணமகள் குறித்த வதந்திகளும் அவ்வப்போது வெளிவரும் வேளையில் அதனை அவரது தந்தை டி ராஜேந்தர் மறுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களை நேற்று டி ராஜேந்தர் சந்தித்தார்.

இதன் போது செய்தியாளர்கள் சிம்புவுக்கும் நடிகை திரிஷாவுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது குறித்து வினவியபோது குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த டி ராஜேந்தர் தண்ணீரை பருகியபடி அடுத்த கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.

சிம்புவின் திருமணம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே அவர் யாரை திருமணம் செய்கிறார் என்பது தெரிய வரும் என்பதும் அதுவரை வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் அனைத்துமே வதந்திகளாக கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Share.
Leave A Reply

Exit mobile version