தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர் சீட்டில் ஆளே இல்லாமல் ஓடும் காரின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் பக்கத்தில் தாகூர் செர்ரி என்பவர் பதிவிட்ட இந்த வீடியோ தான் இந்த பரபரப்புக்கு காரணம். அந்த வீடியோவில்  பழைய பிரீமியர் பத்மினி கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்களுடன் வேகமாகச் செல்கிறது.

ஆனால் அதில் ஆச்சரியம் என்னவென்றால் காரின் டிரைவர் சீட்டில் யாருமே இல்லை. ஆனால் காரின் பின்னால் இருந்து பார்க்கும்போது ஒரு நிமிடம் அனைவருக்கும் ஒரு வித பதற்றம் தொற்றிக் கொள்கிறது.

இந்நிலையில் காரை பின் தொடர்ந்து செல்லும் வாகனத்தில் இருப்பவர்கள் காரின் அருகே சென்று பார்த்தபோது தான் அனைவருக்கும் விவரம் புரிந்தது.

அதாவது கோ ஓட்டுநர் சீட்டில் இருப்பவர் ஸ்டியரிங் மூலம் காரை இயக்கிக் கொண்டிருந்தார். சாதாரணமாக கார்களில் டிரைவரிடம் தான் அனைத்துக் கட்டுப்பாடுகளும் இருக்கும்.

ஆனால், கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் டிரைவருக்கு எப்படி அத்தனை கட்டுப்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதேபோல கோ டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கும் இருக்கும்.

 

ஏனென்றால் காரை ஓட்டி பயிற்சி எடுக்கும் நபர்கள் ஏதாவது தவறு செய்தால் கோ டிரைவர் சீட்டில் அமர்ந்திருக்கும் பயிற்சியாளர்கள் காரை கட்டுப்படுத்துவார்கள்.

ஒருவேளை அப்படி அந்த முதியவரும் கட்டுப்படுத்துகிறாரோ என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version