இலங்கையில் நேற்று வியாழக்கிழமை 309 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை காலை 50 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் தரவுகளின் படி, குறித்த தொற்றாளர்களில் 22 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 02 தொழிற்சாலைகளை சேர்ந்த ஊழியர்கள் எனவும், 06 பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்கள் எனவும், மேலும் 22 பேர் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, வியாழக்கிழமை மாலை மேலும் 259 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த தொற்றாளர்களில் 02 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், 182 பேலியகொடை மீன் சந்தையிலிருந்தும்,75 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2817 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,287 ஆகும். இவர்களில் வைத்தியசாலையில் 2,712 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதோடு 3561 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version