அச்சுவேலி – இராசபாதை வீதியில் கட்டுப்பாட்டையிழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதுடன் அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டையிழந்த மாருதி சுவிட் கார் சுமார் 50 மீற்றர் இழுத்துச் சென்று மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டது. இதன் போது மின்கம்பம் உடைந்து கார் மேல் வீழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.