கொரோனா இடர் மத்தியில் உயர்தர பரீட்சையை சிறப்பாக எழுத்தி முடித்து, தான் கற்ற பாடசாலையை வணங்கி கௌரவித்து விடைபெற்ற மாணவனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நேற்று க.பொ.த.(உ/த) பரீட்சையை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர். தான் 13 வருடம் கல்விகற்ற பாடசாலையான எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி வித்தியாலத்திலிருந்து விடைபெறும் போது அப்பாடசாலையை நோக்கி விழுந்து வணங்கி விடைப்பெற்று நல்லதொருபண்பினை எடுத்துக்காட்டிய இம் மாணவன் நிச்சயமாக உன்னதமான எதிர்காலத்தை தனதாக்குவானாக என எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.