இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், உடுவில் ஆலடியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

30 வயதுடைய இளம் குடும்பஸ்தரரும் அவரது அம்மம்மாவான 70  வயது பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளம் குடும்பஸ்தரை அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து அவரின் அம்மம்மாவிடம் கூறியுள்ளார். அவர் தனது பேரன் குறித்து பிரார்த்தனை செய்துள்ளார்.

இதற்கிடையே உடனடியாக குறித்த நபரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார். அந்தச் செய்தியை கேள்வியுற்ற அதிர்ச்சியில் அவரின்  அம்மம்மா மயங்கி சரிந்துள்ளார்.

இதனையடுத்து அவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். சடலங்கள் உடகூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version