பிரான்ஸில் ஒரே நாளில் 60486பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரங்களில் 405 பேர் வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
430 பேர் முதியோர் இல்லங்களில் கடந்த செவ்வாய்க் கிழமையில் இருந்து நேற்று வரை உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக 27 ஆயிரத்து 979 பேர் இப்பொழுது பிரான்சில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 3 ஆயிரத்து 140 பேர் வைத்தியசாலைகளில் covid-19 காரணமாக அனுமதிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4331 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
434 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்பவர்களில் நான்கில் ஒருவர் மீண்டு வருவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நச்சுயிரித் தாக்கம் அலை 2 ஆரம்பித்தபின்னர் முதல் தடவையாக பிரான்சிலிருந்து ஜேர்மனிக்கு கொரோனாதொற்று நோயாளர்கள் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பிரான்ஸின் கிழக்குப் பகுதி நகரங்களிலுள்ள வைத்தியசாலைகள் இப்பொழுது நிரம்பி வழிய ஆரம்பித்திருப்பதால் அங்கிருந்து கொரோனா தொற்றாளர்களை ஜேர்மனியிலுள்ள வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.
கொரோனா நச்சுயிரித் தாக்கத்தின் முதலாவது அலையின் போது 330 தொழு நோயாளர்கள் grand d’est மாகாணத்திலிருந்து ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.