ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட ஜாம்பவான் டியகோ மரடோனா தனது 60 ஆவது வயதில் இன்று காலமானார்.

ஆர்ஜென்டீனாவின் பியூனர்ஸ் அயர்ஸிலுள்ள தனது வீட்டில் மாரடைப்பினால் அவர் காலமானார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர

 

ஆர்ஜன்டீனாவின் முன்னாள் மத்திய கள ஆக்ரோஷ வீரரும் முகாமையாளருமான மரடோனாவுக்கு இம் மாதம் முளையில் இரத்த உரைவுக்கான சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு மதுபான சார்புக்கு சிகிச்சை அளிக்கப்படவிருந்தது.

கால்பந்தாட்ட வரலாற்றில் அதிசிறந்த வீரர்களில் ஒருவரான டியகோ மரடோனா அணித் தலைவராக ஆர்ஜன்டீனாவை 1986இல் உலக சம்பியனாக்கியிருந்தார்.

 

1986 உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் மரடோனா தனது அற்புதமான கால்பந்தாட்ட நுட்பங்களைக் கொண்டு அலாதியான கோல்களைப் போட்டிருந்தார். அதில் ‘கடவுளின் கரம்’ கொடுத்த கோலும் அடங்குகின்றது.

பார்சிலோனாஇ நெப்போலி ஆகிய கழகங்களுக்காகவும் மரடோன விளையாடியிருந்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version