துபாய் ஆட்சியாளரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூமின் முன்னாள் மனைவியான இளவரசி ஹாயா பிந்த் அல் ஹுஸைன், தனது மெய்க்காப்பாளருடனான உறவை மறைப்பதற்கு 12 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களுக்கு மேல் (சுமார் கோடி இலங்கை ரூபா) வழங்கியுள்ளார் என பிரிட்டனின் டெய்லி மெய்ல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் (யூ.ஏ.ஈ) உப ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்கும் ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தூம் (71), ஐ.அ.இராச்சியத்தின் ஒரு பிராந்தியமான துபாயின் ஆட்சியாளராக விளங்குகிறார்.
அவர் 2004 ஆம் ஆண்டு தனது ஜோர்தானிய இளவரசி ஹாயா பிந்த் அல் ஹுஸைனை திருமணம் செய்துகொண்டார். ஜோர்தானின் முன்னாள் மன்னர் ஹுஸைனின் மகளான அவர் இளவரசி ஹாயா (38) என சுருக்கமாக அழைக்கப்படுபவர்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இவர்கள் விவாகரத்து செய்தனர். 2019 ஏப்ரலில் இளவரசி ஹாயா தனது இரு பிள்ளைகள் சகிதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வெளியேறி பிரிட்டனில் வசிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், இளவரசி ஹாயா தனது பிரித்தானிய மெய்ப்பாதுகாவலரான ரஸல் ஃப்ளவர்ஸுடன் இரகசிய தொடர்பு வைத்திருந்தார் எனவும், இந்த உறவு தொடர்பாக எவரிடமும் கூறாமல் இருப்பதற்காக 12 இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ட் (30 கோடி ரூபா) பெறுமதியான பரிசுப் பொருட்களை வழங்கினார் எனவும் டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.
இவற்றில் இதில் 12.000 பவுண்ட்ஸ் (12 இலட்சம் ரூபா) மதிப்புள்ள கடிகாரம் மற்றும் 50,000 பவுண்ட்ஸ் (12 கோடி ரூபா) பெறுமதியான விண்டேஜ் ஷொட்கன் ஆகியவையும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகள் பராமரிப்பு தொடர்பில் இளவரசி ஹயாவுக்கும் அவரின் முன்னாள் கணவரான ஷேக் மஹ்தூமுக்கும் இடையில் லண்டன் மேல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின்போது, இளவரசி ஹயாவுக்கும் மெய்ப்பாதுகாவலருக்கும் இடையிலான உறவு விவகாரம் அம்பலமானது என டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.
ரஸ்ஸலின் மனைவி அவர் பணம் மற்றும் பரிசுகளால் மயங்கியதாக நம்பினார். அவர் அவருக்கு நிறைய விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார்,
இந்த விவகாரம் பற்றி ரஸல் ஃப்ளவர்ஸ் மனைவி அறிந்ததும், அவர் முற்றிலும் உடைந்துவிட்டதாகவும், ஃப்ளோவர்ஸை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாகவும் மெயில் ஒன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.