அதிதீவிர புயலாக நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே 15 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடந்து வருகிறது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நிவர் புயல் நேற்றிரவு 10.45 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்கியது. தற்போது 15 கி.மீட்டர் வேகத்தில் கரையை கடந்து வருகிறது. இதனால் பலத்த காற்று வீசி வருகிறது. புதுச்சேரி, கடலூரில் கனமழை பெய்து வருகிறது.

முழுவதுமாக கரையை கடக்க அதிகாலை 3 மணியாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காலை 8.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை அதிகபட்சமாக கடலூரில் 16.3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 14.9 செ.மீட்டர் மழையும், சென்னையில் 8.9 செ.மீட்டர் மழையும், காரைக்காலில் 8.4 செ.மீட்டர் மழையும், நாகையில் 6.2 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை மையத்தின் 11.15 மணி நிலவரப்படி நிவர் புயல் கடந்த ஆறு மணி நேரமாக 15 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புதுச்சேரியின் கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் 40 கி.மீட்டர் தொலைவிலும், கடலூரின் கிழக்கு வடகிழக்கில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையின் தெற்கே 115 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version