கிளிநொச்சியில் நேற்றைய தினம் இரண்டு மரணங்கள் இடம்பெற்றது. ஒன்று கிளிநொச்சி திருவையாறு பகுதியினைச் சேர்ந்த 55 வயது மதிக்கதக்க கோவிந்தன் மோகனதாஸ்.

இரண்டாவது கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தைச் சேர்ந்த  கந்தையா செல்வராசா வயது 61 அகிய இருவரும்  சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

 

இருவரும் மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு சென்ற மோகனதாஸ் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அதற்குரிய தனிமைப்படுத்தல் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் இரவு மரணமடைந்துள்ளார்.

இதேவேளை செல்வராசா நேற்றிரவு நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லும் போதே மரணமடைந்துள்ளார்.

இருவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த வைத்தியசாலை நிர்வாகம் அதன் மாதிரிகளை பெற்று பரிசோதனைக்காக அனுப்பியிருந்தார்கள்.

இதில் மோகனதாஸ் (65) என்பவரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு தொற்று இல்லை என வந்திருந்ததால் அவரது உடலை உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை உயிரிழந்த மற்றையவரான  செல்வராசாவின் (61) பி.சி.ஆர் பரிசோதனைக்கு மாதிரிகள் இன்று காலையே அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் மோகனதாஸுக்கு (65) உடற்கூராய்வு செய்வதற்கு பதிலாக செல்வராசாவுக்கு (61) உடற்கூராய்வு செய்யப்பட்டு அவரது உடல் இன்று (07) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் திருவையாறில் உள்ள அவரது இல்லது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

 

எடுத்துச் செல்லப்பட்ட உடல் வீட்டில் பெட்டி திறந்து வைக்கப்பட்ட நிலையில் மனைவி உட்பட அனைவரும் சோகத்தில் கதறி அழுதுகொண்டிருக்க இறந்த மோகனதாஸின் 15 வயது மகள் இது தந்தையின் உடல் இல்லை கதறிய போதே உடல் மாறி அனுப்பபட்ட விடயம் தெரியவந்தது.

அப்போது மீண்டும் திருவையாறு வீட்டிலிருந்து கிளிநொச்சி  மாவட்ட வைத்தியசாலைக்கு உடல் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி  வைத்தியசாலை நிர்வாகத்திடம் வினவிய போது, குறித்த சம்பவம்  தொடர்பான உண்மைநிலை தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மனதினை வேதனைப்படுத்த விரும்பவில்லை எனவும், இவ்வாறான தவறுகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறாத வகையில் வைத்தியசாலையின் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரேத அறையில் அடையாளம் காட்டப்பட்ட போதே தவறு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version